’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம்

 ’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம்

ஜோ ஜியோவானி சிங் இயக்கத்தில் ரியோ ராஜ், ஜெய்னீஸ், குணாளன், நபீஷா மூனிலா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்”

கதைப்படி,

நாயகன் ரியோ ராஜ் எப்போது வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், சிங்கப்பூரில் மருத்துவர்கள் பலர் அடுத்தடுத்த கொல்லப்படுகின்றனர். கொலையாளியை கண்டுபிடிக்க தீவிரமாகிறார் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ்.

ரியோ ராஜுன் அக்கா, ரியோ ராஜிடம் ரியல் கேம் விளையாடுவதற்கான ஐடியா ஒன்றை கொடுக்கிறார். அதன்படி, இருவரையும் ஒரு தனித்தனி வீட்டிற்குள் சென்று அங்கிருக்கும் பொருளை யார் எடுத்து வருகிறார்களோ அவர் தான் வின்னர் என்று கூறிவிடுகிறார் ரியோ ராஜுன் அக்கா.

அந்த பொருளை யார் எடுத்து வருகிறார்.? தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி பிடிபட்டாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

தனக்கு கொடுக்கப்பட்டதை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் ரியோ ராஜ். ஒவ்வொரு காட்சிகளையும் தனக்கே உரித்தான பாடி லேங்குவேஜில் கொடுத்து அசத்தியிருக்கிறார்.,

கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் காட்சிகளுக்கு அழகாகவும் நடிப்பில் கவனம் செலுத்தியும் நடித்திருக்கிறார். ஓரிரு காட்சிகளில் இன்னும் சற்று நடித்திருக்கலாமே என்று கூற வைத்து விட்டார்.

படத்தில் சைக்கோவாக நடித்திருக்கும் குணாலன், கதைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்திருந்தார் இயக்குனர் ஜோ ஜியோவானி சிங். ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஓகே ரகமாக கடந்து செல்ல வைத்திருக்கிறது.

திரைக்கதையில் சற்று அல்ல நன்றாகவே மெனக்கெட்டிருக்கலாம். நல்லதொரு கதையை எடுத்த இயக்குனர் அதை கூறும் விதத்தில் சற்று கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் நடக்கும் கதை சட்டென்று சிங்கப்பூர் செல்கிறது. அதன்பிறகு சட்டென்று தமிழகத்திற்கு வருகிறது என்று ஜிலேபியை சுற்றுவது போல் நம்மையும் தலை சுற்ற வைத்து விட்டார் இயக்குனர்.

இருந்தாலும், சொல்ல வந்த கதைக்காக இயக்குனரை பாராட்டலாம்.

’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்… – 2.25/5

Related post