குண்டு வெடிப்பு; நிறுத்தப்பட்ட “கேப்டன் மில்லர்” படப்பிடிப்பு!

 குண்டு வெடிப்பு; நிறுத்தப்பட்ட “கேப்டன் மில்லர்” படப்பிடிப்பு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும், நிவேதிதா, சுமேஷ் மூர், சிவராஜ் குமார், ஜான் கொக்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகப்பெரும் செட் அமைத்து நடத்தி வருகிறது படக்குழு.

சில மாதங்களாகவே அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பு நடைபெறும் போது, அங்கு குண்டு வெடிக்கும்படியான காட்சியை படமாக்கியிருக்கிறது படக்குழு.

அப்போது, அருகிலிருந்த கிராம மக்கள் அச்சமடைந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு செல்ல, படப்பிடிப்பிற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று படப்பிடிப்பு நடத்த தடை விதித்தார் மாவட்ட ஆட்சியர்.

இதனால், 15 நாட்கள் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது படக்குழு.

Related post