ரிலீஸ் தேதியை அறிவித்த “கேப்டன்” படக்குழு!

 ரிலீஸ் தேதியை அறிவித்த “கேப்டன்” படக்குழு!

நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கேப்டன்”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டெடி திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆர்யாவும் சக்தி செளந்தர்ராஜனும் கைகோர்த்துள்ளனர்.

இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் பிரபல நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

Related post