உதயநிதி படத்திற்கு பேனர் வைத்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க நேற்று வெளிவந்த திரைப்படம் தான் “நெஞ்சுக்கு நீதி”. நடிகராக மட்டுமல்லாமல், முதல்வரின் மகன், சட்டமன்ற உறுப்பினர் என்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்களது கட்சியினர் பெரிதான வரவேற்பை கொடுத்திருந்தனர் இப்படத்திற்கு.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் பேனர் வைத்துள்ளார். இதனால் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.