சதீஷை ரயிலில் தள்ளி கொன்று விடுங்கள்…. விஜய் ஆண்டனி ஆதங்கம்!!

நேற்று முன் தினம், சென்னை பரங்கிமலை அருகே ஓடும் ரயிலில் சத்யா என்ற் இளம்பெண்ணை சதீஷ் என்பவர் கீழே தள்ளி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மகள் இறந்துவிட்ட செய்தி அறிந்து கவலையுள்ள சத்யாவின் தந்தை மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் இறுதிசடங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த படுகொலைக்கு காரணமான சதீஷை போலீஸார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், “ சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்து சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.