அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்”!

சத்ய ஜோதி பிலீம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு கேப்டன் மில்லர் என டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார். ராக்கி, சாணி காயிதம் படத்திற்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் இதுவாகும்.
திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியவிருக்கிறார்.
அடுத்த வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளிவரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.