பிரபல சினிமா விமர்சகர் கெளஷிக் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

 பிரபல சினிமா விமர்சகர் கெளஷிக் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல யூ டியூப் சேனலில் நேர்காணல், சினிமா விமர்சனம் செய்து வருபவர் கெளஷிக். இவர் அதில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் சினிமாவின் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து சமூக வலைதளங்களின் ரசிகர்கள் பலரை தன் வசப்படுத்தி வைத்திருந்தவர்.

நேற்று இரவு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இவரது இரங்கல் செய்தி கேட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, கெளதம் கார்த்திக், எஸ் ஆர் பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

“Full On Cinema” சார்பிலும் மறைந்த கெளஷிக் அவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page