அவதார் 2; எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரம்மாண்டத்தின் உச்சம்!

 அவதார் 2; எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரம்மாண்டத்தின் உச்சம்!

சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் தான் அவதார்: தி வே ஆஃப் வாட்டர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஏற்கனவே, இப்படத்தின் டீசர் லீக் ஆனதைத் தொடர்ந்து நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியானது. அதுமிகப்பெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான முதல் பாகம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அவதார் முதல் பாகம் உலகம் முழுக்க 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக வாரி குவித்தது.

இந்த வசூல் சாதனையை வேறு எந்த ஹாலிவுட் திரைப்படமும் நெருங்க முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவதார் படத்தின் 2வது பாகமான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related post