வாரிசு படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய உதயநிதி

 வாரிசு படத்தின் முக்கிய ஏரியாவை கைப்பற்றிய உதயநிதி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் பிசினஸ் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாரிசு படத்தை கைப்பற்றியிருக்கிறது.

துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கியமான மாவட்டங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூலில் இந்த மூன்று மாவட்டம் முந்தியடிக்கும் என்பதால் இந்த ஏரியாவை மட்டும் உதயநிதி கைப்பற்றியிருக்கிறார்.

Related post