அதிரடி காட்டும் பொன்னியின் செல்வன்… தள்ளிச் செல்லும் ”காபி வித் காதல்”!!

 அதிரடி காட்டும் பொன்னியின் செல்வன்… தள்ளிச் செல்லும் ”காபி வித் காதல்”!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.

படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம். குடும்பங்கள் சகிதமாக ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

இதனால், திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க சுந்தர் சி இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “காபி வித் காதல்”.

இப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் கொடுத்த பெரும் வெற்றியால், தங்களது படத்தின் வசூல் பாதிக்கும் எனக் கருதிய “காபி வித் காதல்” படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post