College Kumar – திரைப்படம் விமர்சனம்
காலேஜ் குமார் : நடிகர் பிரபு மற்றும் நடிகை அம்பிகா,மதுபாலா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம். 2017இல் கன்னடத்தில் வெளிவந்த காலேஜ் குமார் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம். தான் எடுத்த சபதத்தை முடிக்க தனது மகன் உதவுவான் என்று எண்ணி கொண்டிருக்கும் தந்தை, அதை சற்றும் கண்டு கொள்ளாமல் ஊர் சுற்றி குடித்து கும்மி அடிக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் படத்தின் மைய கரு. படத்தில் தந்தையாக பிரபுவும் அவரது மகனாக ராகுல் விஜயும் நடித்துள்ளனர்.
படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மட்டுமே பொருத்தமாக உள்ளது எனலாம், மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்காமல் கடந்து சென்றுவிடுகிறது. படத்தில் தமிழுக்கு தகுந்தாற்போல் எந்தவித மாற்றமும் செய்யாமல் விட்டது படத்தின் மைனஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபாலா மற்றும் நாசர் நடித்துள்ளனர். படத்தின் இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கன்னடத்தில் இயக்கிய ஹரி சந்தோஷ் தமிழிலும் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தில் சில மாற்றங்களை செய்திருந்தால் தொய்வு இல்லாமல் இருந்திருக்கும்.