மிரட்டப்படும் சாய்பல்லவி; அப்படி என்ன சொன்னார்.?

 மிரட்டப்படும் சாய்பல்லவி; அப்படி என்ன சொன்னார்.?

பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்திய நடிகை தான் சாய் பல்லவி. தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளால், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து #SaiPallavi ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

காரணம் என்னவென்றால், விராட பர்வம் படத்தின் புரமோஷனை முன்னிட்டு அளித்த பேட்டியின் போது காஷ்மீர் பண்டிதர்கள் கொலையையும் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அவர் ஒப்பிட்டு பேசியது தான்.

இவர் நடித்திருக்கும் விராட பர்வம் படத்திற்கான புரமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட சாய் பல்லவி ஒரு கேள்விக்கு சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் சொல்லப்படுவது போல காஷ்மீர் பண்டிதர்கள் அங்குள்ள இஸ்லாமியர்களால் கொல்லப்படுகிறார்கள் என்றால், அதே போலத்தன் இந்தியாவின் ஒரு பகுதியில் மாடுகளை கொண்டு சென்ற ஒரு இஸ்லாமியரை சில இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் சொல்லு என சித்ரவதை செய்தனர். மதத்தின் பெயரால் எங்கேயும் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் கொடுக்க கூடாது என்பது தான் தனது கருத்து.” என்று பேசினார்.

மிகவும் தைரியமாக தனது கருத்தை பேசிய சாய்பல்லவி பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாஜக-வினர் தொடர்ந்து சாய்பல்லவிக்கு மிரட்டல்களை கொடுத்து வருகின்றனர். நட்சத்திரங்கள் பலரும் சாய்பல்லவிக்கு ஆதரவாக ட்விட் செய்து வருகின்றனர்.

 

Related post