குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் இவர்கள் தான்

 குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் இவர்கள் தான்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோ தான் குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலரும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த சீசனான 4வது சீசனை விரைவில் தொடங்க இருக்கிறது விஜய் டிவி. அதற்கான ஆயத்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜிபி முத்து கோமாளியாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் தற்போது போட்டியாளர்களாக தங்களின் சமையல் திறமையை காட்ட வருபவர்களின் மொத்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அதன்படி ஸ்ருஷ்டி டாங்கே, Andreanne Nouyrigat (வெளிநாட்டு நடிகை), ஷெரின் ,ராஜ் ஐயப்பா, சிவாங்கி, VJ விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Related post