திருமண நாள் குறித்த குக் வித் கோமாளி புகழ்!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் மக்களிடத்தில் பரவியது.
இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இவரின் காமெடிக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் இவருக்கும் கை மேல் வந்து சேர்ந்தது.
ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே பென்சியா என்ற பெண்ணை காதலிப்பதாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். இதையடுத்து புகழுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் புகழ் – பென்சியா திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் புகழ் – பென்சியா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்