இந்தியன் 2 படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின் தந்தை

 இந்தியன் 2 படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின் தந்தை

ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ’இந்தியன் 2’. படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ், ஹிந்தியில் பல படங்கள் நடித்து வருகிறார்..

இப்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார். இவர் எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக்கூடியவர்.

ஒருமுறை யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அதற்கு காரணம் கேப்டன் தோனி தான் என யோக்ராஜ் குற்றம் சாட்டியிருந்தார். அது அப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியன் 2 படத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு முன் சிகை அலங்காரம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post