10 கோடியை கூட எட்டாத “கஸ்டடி”; கவலையில் நாக சைதன்யா!

 10 கோடியை கூட எட்டாத “கஸ்டடி”; கவலையில் நாக சைதன்யா!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி கடந்த 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கஸ்டடி”.

இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வெளியான இத்திரைப்படம், முதல் நாள் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து திரையரங்குகளில் எண்ணிக்கை குறைந்ததால் பாக்ஸ் ஆபீசில் பெரும் அடி விழுந்தது.

இதுநாள் வரை மொத்தமாக 9.78 கோடி ரூபாய் மட்டுமே வசூலை ஈட்டியுள்ளது கஸ்டடி. பத்துகோடி கூட வசூல் இல்லாததால் பெறும் கவலையில் இருக்கிறாராம் நாக சைதன்யா.

இவர் நடித்து வெளிவந்த படங்களில் கஸ்டடி மட்டுமே மிகக் குறைவான வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post