DADA திரைவிமர்சனம்

 DADA திரைவிமர்சனம்

கவின், அபர்ணா தாஸ், VTV கணேஷ், பாக்யராஜ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “DADA”. இப்படத்தை கணேஷ்.கே.பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

எதை பேசுகிறது இப்படம்?

தாயை பற்றிய சிந்தனை வராத வகையிலும். அப்பாவை பற்றிய ஒரு புரிதலோடும். தன் மகனை வளர்க்கும் ஒரு தந்தையின் வலியையும். சமூகத்தில் சர்வ சாதாரணமாக தற்போதய காலத்தில் நடந்து வரும் சில விஷயங்களையும் கண் கலங்கடித்து பேசுகிறது “DADA”.

கதைப்படி,

கவின் மற்றும் அபர்ணா இருவரும் கல்லூரியில் படித்து வரும் காதலர்கள். திடிரேன ஒருநாள், அபர்ணா கர்பமாக இருப்பது தெரியவர. கவின் மற்றும் அபர்ணா இரு வீட்டாரும் இவர்களை தள்ளி வைக்கிறார்கள்.

குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் இவர்கள். தனியாக ஒரு வீடெடுத்து தங்கி வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒரு நாள் காலை, இருவரும் சண்டையிட. கவின் வேளைக்கு சென்ற பின் பிரசவ வலியில் துடிக்கிறாள் அபர்ணா.

அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபர்ணா. பிரசவத்தின் பின், குழந்தையை விட்டு விட்டு தனது பெற்றோருடன் செல்கிறாள். அதன் பின், குழந்தையை தனி ஆளாக வளர்க்கிறார் கவின்.

சில ஆண்டுகள் கழித்து கவின் வேலைக்கு செல்லும் இடத்தில் அபர்ணாவும் பணியாற்ற, இருவரும் சந்திக்கிறார்கள். அதன் பின் இருவரும் சேர்ந்தார்களா? பிறந்த குழந்தையை ஏன் விட்டு சென்றார் அபர்ணா? என்பது மீதிக்கதை…

கல்லூரி மாணவனாகவும், அப்பாவாகவும் கவினின் நடிப்பு கைத்தட்டலுக்குரியது. குறிப்பிட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்கும் கவினின் கலைப் பயணம் இன்னும் வெகு தூரம் இருக்கிறது.

அபர்னா தாசின் நடிப்பு சிறப்பு. எனினும், அழுகும் காட்சிகளில் கூடுதல் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணம்.

கவினின் நண்பராக நடித்த, ஹரிஷ் குமார் மற்றும் “அருவி” படப்புகழ் பிரதீப் குமார் இருவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்கள் வந்து செல்லும் காட்சி நம்மை சிரிக்க வைக்கிறது.

கணேஷ்.கே.பாபு இயக்கம் பாராட்டதக்கது. அவரின் கதையும் க்ளைமாக்ஸும் பிரம்மாதம். நீண்ட நாட்கள்…. இல்லை இல்லை… பல ஆண்டுகளுக்கு பின் கண் கலங்கும் அளவிற்கு ஒரு பீல் குட் படத்தை நமக்கு விருந்தாக கொடுத்துள்ளார் இந்த படைப்பாளி.

ஜென் மார்டினின் இசை படத்தின் எமோஷனை இறுதி வரை தக்கவைத்தது.

DADA – ஃபீல் குட் திரைப்படம்  – (3.75/5)

Related post