100 கோடியை நெருங்கும் தசரா!

 100 கோடியை நெருங்கும் தசரா!

தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் என அழைக்கப்படும் நானி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “தசரா”.

கடந்த 30ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து மக்களும் ஆதரவு கொடுக்க, பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டு இருக்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இன்னுஜ்ம் ஓரிரு நாட்கள் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படங்களின் வரிசையில் தசரா படமும் இணையும் என்கிறார்கள்.

 

Related post