55 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த “டிமாண்டி காலணி 2”
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவாணி சங்கர், முத்துக்குமார் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “டிமாண்டி காலணி 2”.
படம் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், நல்லதொரு விமர்சனமும் படத்திற்கு கிடைத்தது.
இந்நிலையில், படத்தின் வசூலானது இதுவரை சுமார் 55 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், கோட் படம் வெளியாகும் வரையில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் டிமாண்டி காலணி 2 திரைப்படம் திரையரங்குகளை ஆக்கிரமித்து ஓடும் என்கிறார்கள்.