அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ்?

 அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ்?

அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துணிவு வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறார்களாம் விக்னேஷ் சிவன் தரப்பினர்.

விக்ரம் படத்தில் சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டதால், அஜித்தோட வில்லனாக நடிக்க தனுஷ் ஓகே சொல்லிவிடுவார் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர்.

அவர் ஓகே சொன்னதும் அதற்கான பணிகளை விரைந்து முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

 

Related post