முதல்வராகும் தனுஷ், பரபரக்கும் சினிமா களம்!!

 முதல்வராகும் தனுஷ், பரபரக்கும் சினிமா களம்!!
Digiqole ad

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சம்யுக்தா மேனன் தனுஷின் ஜோடியாக இப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். தனுஷ் இதில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

2010 ஆண்டு ராணா டகுபதி நடித்து வெளியான லீடர் படத்தின் இரண்டாம் பாகமாக இது இருக்கும் என பேசப்படுகிறது.

விரைவில் இதற்கான படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Digiqole ad
Spread the love

Related post