திருச்சிற்றம்பலம் கொடுத்த வரவேற்பால் சம்பளத்தை உயர்த்திய தனுஷ்!

மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க வெளிவந்த திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”.
அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டு, வெற்றிகரமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரையிலும் வசூலை வாரிக் குவித்திருக்கிறது இப்படம்.
மிகவும் குஷியாக இருக்கும் தனுஷ், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறாராம். இதனால், தயாரிப்பாளர்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளார்களாம்.
இதுவரை 20 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த தனுஷ் அடுத்தடுத்த படங்களுக்கு 30 கோடி வரையிலும் சம்பளம் பேசி வருகிறாராம். அதிகாரப்பூர்வ செய்தி இல்லை என்றாலும், தகவல் கசிந்து கொண்டு பரவலாக பரவி வருகிறது.