தனுஷின் “நானே வருவேன்”.. எப்ப வருவோம்னு சொல்லிடாங்க!!

 தனுஷின் “நானே வருவேன்”.. எப்ப வருவோம்னு சொல்லிடாங்க!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் இம்மாதம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தினை வரும் 29ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் வெளிவருவதால் ஒரு நாளுக்கு முன்னதாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related post