பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிச் சென்ற தனுஷின் “வாத்தி”

 பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிச் சென்ற தனுஷின் “வாத்தி”

நடிகர் தனுஷ் நடிக்க தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடலான வா வாத்தி என்ற பாடல் ஹிட் அடித்துள்ளது.

வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு மாதங்களுக்கு முன் அறிவித்தது.

இந்நிலையில் படம் தொடர்பான பணிகள் முடியும் இன்னும் கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக செய்திகள் வந்தன. அதன்படி இப்போது அடுத்தாண்டு பிப்ரவரி 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. புது போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

Related post