வெற்றிமாறன் படத்தில் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்!?

 வெற்றிமாறன் படத்தில் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர்!?

விடுதலை படத்தின் கடைசி கட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படத்தினை முடித்ததும் வாடிவாசல் படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வாடிவாசலை முடித்த கையோடு தனுஷ் மற்றும் ஜுனியர் என் டி ஆரை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் உலா வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த செய்தியில் துளி அளவும் உண்மை இல்லை என்று வெற்றிமாறன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொய்யான செய்தி உலா வருவதாகவும் வெற்றிமாறன் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Related post