முதல் நாள் பத்து கோடி… நானே வருவேன் வசூலை ஓப்பனாக கூறிய கலைப்புலி எஸ் தாணு!

 முதல் நாள் பத்து கோடி… நானே வருவேன் வசூலை ஓப்பனாக கூறிய கலைப்புலி எஸ் தாணு!

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்
கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளியானது.

ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இப்படம்.

இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

படத்திற்கான வசூலை எளிதில் எந்த தயாரிப்பாளரும் கூற தயங்கும் நிலையில், தயாரிப்பாளர் தாணு எப்போதும் தனித்துவமாக தனது படத்தின் வசூல் விவரங்களை கூறி வருபவர்.

அப்படியாக இப்படத்தின் வசூலையும் தற்போது அறிவித்துள்ளார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நேரில் சென்று இயக்குனர் செல்வராகவனை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்

 

Related post