நாளை வெளியாகும் தனுஷின் நானே வருவேன் பட டீசர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

 நாளை வெளியாகும் தனுஷின் நானே வருவேன் பட டீசர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

கலைப்புலி தாணு தயாரிப்பில் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க “நானே வருவேன்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது என தனுஷ் தெரிவித்துள்ளார்.

மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளப்பக்கத்தில் “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி” செப்டம்பர் மாதம் வெளியீடு என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

 

Related post