திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா.?

 திருச்சிற்றம்பலம் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா.?

ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”.

இந்த படத்தில், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்கான பணிகளை செய்யத் துவங்கியிருக்கின்றனர்.

நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் நடித்ததற்காக தனுஷ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் பதினைந்து கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post