தனுஷ் பாடல் எழுத அனிருத் இசையமைக்க; வைரலான வீடியோ!

 தனுஷ் பாடல் எழுத அனிருத் இசையமைக்க; வைரலான வீடியோ!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றிற்கான அப்டேட் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் அனிருத் அப்பாடலின் டைட்டில் தாய் கிழவி என்றும், தனுஷ் தான் இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இப்பாடல் நாளை வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related post