ஹேக்கர்ஸால் முடக்கப்பட்ட தனுஷ் நிறுவனத்தின் யூ ட்யூப் தளம்.!!

 ஹேக்கர்ஸால் முடக்கப்பட்ட தனுஷ் நிறுவனத்தின் யூ ட்யூப் தளம்.!!

நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த படத்தையும் அவ்வப்போது தயாரிக்க “வொண்டர் பார்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார் தனுஷ்.

பல படங்களை தனுஷ் தனது நிறுவனத்தில் தயாரித்து வந்தார். தனுஷ் நடித்த “மாரி 2” படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.

இப்படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது. இப்பாடல் தனுஷின் வொண்டர் பார் யூ டியூப் தளத்தில் வெளியானது.

பல மில்லியன்களை வாரிக் குவித்த இப்பாடல் பல சாதனைகளையும் படைத்தது.

இந்நிலையில், இன்று இந்நிறுவன யூ டியூப் தளம் ஹேக்கர்ஸால் முடக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூ டியூப் தளத்தை மும்முரமாக செயல்பட்டு மீட்டெடுத்தது டிவோ நிறுவனம்.

Related post