Dharala Prabhu – திரைப்படம் விமர்சனம்

 Dharala Prabhu – திரைப்படம் விமர்சனம்

தாராள பிரபு : நடிகர் விவேக் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2012இல் வெளிவந்து ஹிட்டடித்த ஹிந்தி திரைப்படம் விக்கி டோனர் என்ற படத்தின் ரீமேக் தான் இது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற வைக்க முடியும் என்று கூறி நிறைய தம்பதிகளிடம் பணம் வாங்குகிறார் டாக்டர் விவேக். பிறகு நல்ல ஆரோக்கியமான இளைஞரை விந்தணுக்கள் தானம் செய்வதற்காக தேடி அலைகிறார். அவர் கண்ணில் சிக்கும் ஹரிஷ் கல்யாண் முதலில் ஏற்க மறுக்கிறார் பின்பு ஒரு காரணத்திற்காக அதை செய்கிறார். அவரால் பல தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஹரிஷ் கல்யாண் இந்த விஷயத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே படம்.

படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது முந்தைய படங்களில் இருந்து பாடம் கற்றுள்ளார். படத்தை நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக், காமெடியில் அரங்கை அதிர வைக்கிறார்.  படத்தின் நாயகி தான்யா ஹோப் நடிப்பில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை, பின்னணி இசை உயிரோட்டம் தருகிறது. படத்தின் ஒளிப்பதிவு தரமான படத்தை கண்முன் தருகிறது. இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைக்கதையில் தன்னுடைய மாயாஜாலத்தை சேர்த்து தமிழ் மக்களை கவரும் வகையில் தந்திருக்கிறார்.

 

Related post