வெளிவருகிறது விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

 வெளிவருகிறது விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட படம் தான் “துருவ நட்சத்திரம்”.

இப்படத்தில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா நடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து பல காரணங்களால் படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருந்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

இந்நிலையில், சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக, படத்தினை வரும் மே மாதம் 19 ஆம் திரைக்குக்குக் கொண்டு வர கெளதம் வாசுதேவ் மேனன் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்திற்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

Related post