நடிகரும் இயக்குனருமான ஈ ராமதாஸ் காலமானார்

 நடிகரும் இயக்குனருமான ஈ ராமதாஸ் காலமானார்

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ ராமதாஸ், தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இருந்து வந்தார் ஈ ராமதாஸ்.

பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர் ஈ ராமதாஸ்.

விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட ராமதாஸ் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என சென்னைக்கு வந்தவர். நேற்று இரவு மாரடைப்பு காரணமாக ராமதாஸ் உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ராமதாஸின் மறைவு செய்தி அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love

Related post