எழுத்தாளர் சங்கத்திற்கு மீண்டும் தலைவரானார் கே பாக்யராஜ்!!

 எழுத்தாளர் சங்கத்திற்கு மீண்டும் தலைவரானார் கே பாக்யராஜ்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு வடபழனி மியூசிக் யூனியனில் தொடங்கி மாலை 4 மணி வரை நடந்து முடிந்தது.

இதில், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ஒரு அணியும் வசந்தம் என்ற மற்றொரு அணியும் போட்டியிட்டது.

மொத்தம் 570 பேர் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். அதில் 485 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருந்தனர்.

தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

மொத்தமாக 356 வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ் ஏ சந்திரசேகர் 150 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

செயலாளர் பதவிக்கு பாக்யராஜ் அணியைச் சார்ந்த லியாகத் அலிகான் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ் ஏ சந்திரசேகர் அணியைச் சார்ந்த மனோஜ் குமார் 151 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Related post