என்னால முடியலடா… கடைசியாக இயக்குனரிடம் கூறி வந்த மனோபாலா!

 என்னால முடியலடா… கடைசியாக இயக்குனரிடம் கூறி வந்த மனோபாலா!

இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா நேற்று மாலை காலமானார். இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பல நட்சத்திரங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

பத்து தினங்களுக்கு முன் மனோபாலா நடித்து வந்த ஒரு படத்தினை ராஜவம்சம் பட இயக்குனரான கதிர்வேல் இயக்கி வந்தார்.

அப்போது நடந்த விஷயத்தை இயக்குனர் கதிர்வேல் தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில்,
மரண வேதனையிலும்
படப்பிடிப்பு தளம் வந்து
படுத்தபடியே
“என்னால முடியலடா!
மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்”
என சொல்லி விட்டு போனவரே
இப்படி சொல்லாமல் போவது முறையா?

கடைசி பிறந்த நாளை
எம்மோடு கொண்டாடி விட்டு
இப்படி நடுவழியில் திண்டாட
விட்டுவிட்டு போதல் சரியா?

காலங்கள் கடந்தாலும்
கடைசியாய்
நடித்து
எங்களோடு
வாழ்ந்த கணங்கள்
என்றும் எங்கள்
நினைவில் நிலைத்து நிற்கும்.” என்று கூறியுள்ளார். இச்செய்தி பலரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது.

Related post