தலைவர் 169 ; திரைக்கதையில் மாற்றம் செய்ய அழைக்கப்பட்ட பெரிய இயக்குனர்!

 தலைவர் 169 ; திரைக்கதையில் மாற்றம் செய்ய அழைக்கப்பட்ட பெரிய இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது ரஜினிகாந்தின் 169வது திரைப்படம்.

இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு தான் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வெளியானது.

இப்படம் பெரிதளவில் தோல்வியை சந்தித்ததால் மிகவும் மனமுடைந்தார் ரஜினிகாந்த். இதனால், தலைவர் 169ல் திரைக்கதையை மாற்றம் செய்ய முடிவு செய்தார் ரஜினிகாந்த். இதற்காக, மூத்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அழைக்கப்பட்டுள்ளார்.

தலைவர் 169ன் திரைக்கதையை கே எஸ் ரவிக்குமார் செய்யவிருக்கிறாராம்.

 

Related post