திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

 திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயகுனரும் நடிகருமான டி பி கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

லக்கி ஸ்டார்’, ‘வீடு, மனைவி, மக்கள்’, ‘எங்க ஊரு காவக்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘சீனா தானா’, ‘மகனே மருமகனே உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related post