3 நாட்களில் 30 கோடி; தனது மார்க்கெட்டை தக்க வைத்த சிவகார்த்திகேயன்!

 3 நாட்களில் 30 கோடி; தனது மார்க்கெட்டை தக்க வைத்த சிவகார்த்திகேயன்!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “டான்”. இப்படன் கடந்த வாரம் வெளியானது.

படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டான் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. குடும்ப ரசிகர்கள் பெருமளவில் படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், படம் வெளியாகி முதல் நாளில் 13 கோடியும் இரண்டாவது நாளில் 11 கோடியும் மூன்றாவது நாளில் 9 கோடி வசூலாகியுள்ளது.

முதல் மூன்று நாளில் மட்டும் மொத்தமாக இந்த படம் 33 கோடி வசூல் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 40 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் டாக்டர் படம் போலவே வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பல முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் வசூலில் பின் தங்கி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களை ஹிட் கொடுத்து, கோலிவுட்டில் தனக்கான மார்க்கெட்டை நிலைநிறுத்தி வருகிறார்.

Related post