டி.எஸ்.பி விமர்சனம்

 டி.எஸ்.பி விமர்சனம்

யார் எல்லாம் நடிச்சிருக்காங்க?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அணு கீர்த்தி வாஸ், “பாகுபலி” பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தம், சிங்கம் புலி, தீபா எல்லாரும் நடிச்சிருக்காங்க…

அப்போ படம் நல்ல காமெடியா இருக்கோ?

அதான் இல்ல, சொல்றேன் கேளுங்க.

கதை : வழக்கமான பழி வாங்கும் கதை.

விஜய் சேதுபதி நடிப்பு எல்லாம் ஓகே. அதே, நய்யாண்டி, திமிர், எதார்த்தம் அப்டினு வழக்கமா எதையெல்லாம் செஞ்சி ரசிக்க வைப்பாரோ அதே மாதிரி தான் இந்த படத்துலயும்.

ஆனால், என்ன “பாகுபலி” பிரபாகருக்கு தான் “மாஸ்டர்” பட பவானி கெட் அப் போட்டு விட்டுட்டாங்க. அவரோட நடிப்பும் சூப்பரா தான் இருக்கு.

ஹீரோயின் செலக்ஷன் தான் தப்பு. ஒருத்தருக்கும் காமெடி எடுபடல. திடீர் திடீர்னு பிளாஷ் பேக் வருது. நம்ம வாழ்க எதை நோக்கி போகுது அப்டினு சொல்ற மாதிரி. இந்த கதை எதை நோக்கி போகுதுன்னே தெரியாது.

எல்லாம் சரி, ஆனால் கிளைமாக்ஸ்ல வில்லனும் ஹீரோவும் சண்டை போடும் போது. நடுவுல டீ குடிப்பாங்க பாருங்க. அத தான் ஏத்துக்க முடியல.

இந்த படத்துக்கு யாரு பா டைரக்டர்?

பொன்ராம் தான் பா.

எந்த பொன்ராம்? வருத்த படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் டைரக்டரா?

அவர் தான். அவர் சீமராஜா-னு ஒரு படம் எடுத்தார். அதையும் மனசுல வெச்சிக்கோ. பட், 1ஸ்ட் ஆப் நல்லா தான் இருந்துச்சி. 2ண்ட் ஆப் தான் பயங்கர சொதப்பல். கதைல கொஞ்சம் கவனமும். திரைக்கதைல கூடுதல் கவனமும் செலுத்தியிருந்தா. பி.ஜி.எம் கும், விஜய் சேதுபதிக்கு இருந்த மாஸுக்கும் படம் எங்கயோ போயிருக்கும்.

கடைசியா என்ன தான் சொல்ற?

விஜய் சேதுபதிக்காக ஒரு முறை பார்க்கலாம். ஆனால், ப்ளீஸ் புகழுக்கும் காமெடிக்கு செட் ஆகல. அவரை சின்னத்திரைல பார்த்தல் தான் சிரிப்பு வருது.

Related post