Eternals – திரைப்படம் விமர்சனம்

 Eternals – திரைப்படம் விமர்சனம்

மார்வெல் திரைப்படங்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் இந்த இடர்னல்ஸ். ஆனால் மற்ற மார்வெல் திரைப்படங்களில் இருந்து சற்று வேறுபட்ட தெரிகிறது படம் , பலகலங்களாக மார்வெல் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். படத்தில் சல்மா ஹஏக், ரிச்சர்ட் மேடன் , ஏஞ்சலினா ஜோலி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. செலஸ்டில்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்ட தேவியன்ட்ஸ் எனப்படும் ஒரு வகை இனம் பூமியில் சுயமாக சிந்தித்து மனிதர்களை வேட்டையாட தொடங்குகிறது, அதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்த எட்டர்னேல்ஸ் எனப்படும் வீரர்கள். 7000 வருடங்களாக பூமியில் தேவியன்ட்ஸ் கிட்ட இருந்து பூமியை காப்பாற்றி வருகின்றனர். இடையில் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபடுகளால் தனித்தனியாக பிரிந்து செல்கின்றனர். நிகழ் காலத்தில் பூமிக்கு ஏற்பட போகும் மிக பெரிய ஆபத்தை தடுக்க அனைவரும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் , அது என்ன ஆபத்து? அதை தடுத்தர்களா ? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி அதகளம் செய்கிறார்கள் . படம் சற்று பொறுமையாகவே செல்கிறது,இருந்தாலும் திரைக்கதை வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் விசுவல் எபக்ட்ஸ் மிக பிரமாதமாக உள்ளது. வழக்கம் போல பிரமாண்டம் நிறைந்த காட்சிகள் இந்த படத்திலும் நிறைய உள்ளது. பொழுது போக்கு நிறைந்த இந்த படத்தை தவறாமல் சென்று கண்டுகளியுங்கள்.

Spread the love

Related post

You cannot copy content of this page