Ettu Thikkum Para – திரைப்படம் விமர்சனம்

 Ettu Thikkum Para – திரைப்படம் விமர்சனம்

எட்டுத்திக்கும் பற : இயக்குனர் கீராவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாந்தினி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம். தன்னை விட தாழ்ந்த சமுதாயத்தில் உள்ள ஒரு பையனை காதலித்து ஊரை விட்டு ஓடி வருகிறார் சாந்தினி. தனது மகனின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தேடி அலையும் முனீஸ்காந்த், மறுநாள் விடிந்தால் தன் காதலியை கைப்பிடிக்கும் கனவோடு திரியும் வீர நிதிஷ், போலீசால் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து சமூக போராளி தோழர்களை காப்பாற்ற துடிக்கும் வக்கீல் சமுத்திரக்கனி, இவர்களின் வாழ்க்கை எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கிறது என்பது மீதி கதை.

ஆணவ கொலைகளை எதிர்த்து வந்திருக்கும் இன்னொரு படம் தான் இந்த எட்டு திக்கும் பற. நடிகர் சமுத்திரக்கனி தன்னால் முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்த பாடுபடுகிறார். அடுத்ததாக படத்தில் மிளிர்வது நடிகை சாந்தினி முகம் முழுக்க பல கனவுகளோடு இவர் நடித்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தில் முனீஸ்காந்த் காமெடியனாக இல்லாமல் நல்ல குண சித்திர வேடத்தில் அசத்துகிறார். படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு கதையை நகர்த்தி செல்ல உதவுகிறது. இயக்குனர் கீரா சமுதாயத்தின் மேல் இருக்கும் தனது ஆதங்கத்தை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் சாதியை வைத்து படங்கள் அடிக்கடி வருவது சலிப்பாக உள்ளது.

Related post