மாமன்னனில் பஹத் பாசிலை இழுத்த மாரி செல்வராஜ்!!

 மாமன்னனில் பஹத் பாசிலை இழுத்த மாரி செல்வராஜ்!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மாமன்னன்’. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் தான் இந்த “மாமன்னன்”.

அடித்தட்டு மக்களின் வலியைக் கொண்டு, அவர்களின் வாழ்வியலை திரையில் தத்ரூபமாக் காட்டும் வல்லமை கொண்டவர் மாரி செல்வராஜ். அந்த வரிசையில் தான் மாமன்னனும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பஹத் பாசில் ஒப்பந்தமாகியிருக்கிறார். நேற்றிலிருந்து அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். மலையாளத்தில் நடிப்பு அரக்கன் என அனைவராலும் கொண்டாடப்படும் பஹத் பாசில், இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Related post