மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன்

 மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜெண்ட் சரவணன்

முன்னணி தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது அனைவரும் அறிந்ததே.

பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரைடல் ஸ்டூடியோவை திறந்து வைத்த லெஜெண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சினிமாவில் வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும், அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா என்றும் கேட்டனர்.

இக்கேள்விக்கு பதில் அளித்த அவர், “மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், “சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்,” என்று கூறினார்.

நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

Spread the love

Related post

You cannot copy content of this page