ஏ ஆர் ரகுமான் குரலில் மாஸ் கிளப்பும் பத்து தல பாடல்!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் பத்து தல.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரை விருந்து தர காத்திருக்கிறது இப்படம். இந்நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விவேக் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் குரலில் பாடல் அனைவராலும் கொண்டாடும்படியான பாடலாக வெளிவந்திருக்கிறது.
சிம்புவின் மாஸான நடனக் காட்சியும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.