Foreign Sarakku Movie Review – Fulloncinema

 Foreign Sarakku Movie Review – Fulloncinema

அறிமுக இயக்குனர் விக்னேஷ் கருப்பசாமி இயக்கத்தில் பல புதுமுகங்கள் இணைந்து நடித்திருககிறார்கள். படத்தின் தலைப்பில் வித்தியாசமாக உள்ளது போல படத்தின் கதையும் சற்று வித்தியாசமாகவே உள்ளது.படத்தின் கதை, குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக சென்னை வருகிறார், அவருக்கு தமிழக அமைச்சர் ஒருவர் அவர் ரகசியமாக இங்கே தங்க உதவி செய்கிறார். அந்த அமைச்சர் மகனை கொள்ள இன்னும் சில கூலி படைகள் சுற்றி திரிகின்றன. அவர்கள் எதற்கு அவரை கொல்ல நினைக்கிறார்கள், அமைச்சர் மகன் எதற்கு இங்கே பதுங்கி இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படத்தின் திரைக்கதை.

படத்தில் பல புதுமுகங்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தை தயாரித்த நெப்டியூன் பிக்சர்ஸ் கோபிநாத் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற புதுமுக நடிகர்களும் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் பலமே இந்த படத்தின் நீளம் தான், 1 மணி 30 நிமிடங்களில் படம் முடிந்து விடுவதால் படம் பார்க்கும் போது சலிப்பு தட்டவில்லை. படம் குறைந்த பட்ஜெட் என்பது பல காட்சிகளில் தெரிகிறது இருந்தாலும் இயக்குனர் விக்னேஷ் கருப்பசாமி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் தலைப்பை படம் பார்க்கும்போது நியாயப்படுதியிருகிரார் இயக்குனர் விக்னேஷ் அவருக்கு வாழ்த்துகள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதை மறைத்து விடுகிறது.

Foreign சரக்கு : ரசிக்கும் படி உள்ளது

Related post