30 கோடியை தாண்டிய வியாபாரம்’ ; கட்டா குஸ்தி அசாத்திய சாதனை!

 30 கோடியை தாண்டிய வியாபாரம்’ ; கட்டா குஸ்தி அசாத்திய சாதனை!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “கட்டா குஸ்தி”.

படம் வெளியாகி விமர்சகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் 30 கோடி ரூபாய் கடந்துள்ளது.

இதற்கு இன்னும் வியாபாரம் உள்ளது. இதனால் தற்போது ஒன்பது திரைப்படங்கள் கையில் உள்ளன. இது மகிழ்ச்சியாக உள்ளது. எப்ஐஆர் படத்திற்கு பிறகு இது என்னுடைய இரண்டாம் வெற்றி

விஷ்ணு விஷால் என்ற நடிகனை ஆதரிப்பதற்காகவே, விஷ்ணு விஷால் என்ற தயாரிப்பாளர் உருவாகினான்.

நான் தயாரித்த எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது. இன்னும் வரும் திரைப்படங்களும் வெற்றியடையும். அதற்காக உழைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.

 

Related post