முதலில் ப்ரொபோஸ் செய்தது யார்; மஞ்சிமாவை இதனால் தான் காதலித்தேன் – கவுதம்;

 முதலில் ப்ரொபோஸ் செய்தது யார்; மஞ்சிமாவை இதனால் தான் காதலித்தேன் – கவுதம்;

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்கள் காதல் கதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.

அப்போது பேசிய கவுதம் கார்த்திக், தேவராட்டம் படத்தில் பணிபுரியும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரு வருடத்திற்கு பின் தான் எங்கள் உறவு அடுத்த கட்டத்திற்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும்போதெல்லாம் என்னை மீட்டெடுக்கிறார். அவரை காதலித்ததற்கு இது தான் காரணம்.

நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்து ஓகே சொன்னார். அந்த இரண்டு நாளும் பயத்துடனே இருந்தேன். எங்கள் இரண்டு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையடையச் செய்வார் என என் அப்பா கூறுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மஞ்சிமா, கவுதம் கார்த்திக் நடித்த படங்களில் தனக்கு ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தான் இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக வெளியுலகுக்கு அறிவித்ததோடு, தங்கள் திருமண செய்தியையும் அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள கவுதம்-மஞ்சிமா தம்பதிக்கு, ஃபுல் ஆன் சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.

Related post