தளபதி 67 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்!?

 தளபதி 67 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் கெளதம் வாசுதேவ் மேனன்!?

தளபதி விஜய், தற்போது டைரக்டர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தொடர்ந்து தளபதி 67 பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தளபதி 67 குறித்து பேசியிருக்கிறார்.

இயக்குநர் லோகேஷ் தன்னை விக்ரம் படத்தில் நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அதில் நடிக்க முடியாமல் போனதாகவும்
லோகேஷ் தன்னை அவரின் அடுத்த திரைப்படத்திலும் நடிக்க அழைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் கௌதம் மேனன் தளபதி 67-ல் நடிப்பதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related post