கஜினி 2 க்கு தயாரான ஏ ஆர் முருகதாஸ்… பச்சைக் கொடி காட்டிய சூர்யா!?
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது.
கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் சற்று தோல்வியை தழுவினாலும் அவரது இயக்கத்திற்கான இடங்கள் இன்னமும் காலியாகவே உள்ளன.
இதனால், தனது அடுத்த படத்தினை நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஏ ஆர் முருகதாஸ் உள்ளதால் தனது கதையினை மிகவும் நேர்த்தியாக எழுதி வருகிறாராம்.
இதற்காக சூர்யா நடித்து வெளிவந்த கஜினி படத்தின் தொடர்ச்சியாக கஜினி 2 படத்தை இயக்க தயாராக வருகிறாராம் ஏ ஆர் முருகதாஸ்.
இதற்காக சூர்யாவை தொடர்பு கொண்ட ஏ ஆர் முருகதாஸ், கதையை எழுதுங்கள் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஏ ஆர் முருகதாஸ் கதையின் தொடக்க வேலைகளை துவங்கியிருக்கிறாராம்.
விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.