Ghostbusters Afterlife : Movie Review

 Ghostbusters Afterlife : Movie Review

Ghostbusters Afterlife : Movie Review
கோஸ்ட்பஸ்டர்ஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது 1980 களில் கண்டுகளித்து ஆவிகளை வேட்டையாடும் நான்கு நண்பர்கள் அவர்கள் வைத்திருக்கும் வித்தியாசமான ஆவி பிடிக்கும் கருவிகள் தான்.அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக வந்துள்ள படம் தான் இந்த கோஸ்ட்பஸ்ட்டர்ஸ் ஆப்ட்டர்லைவ். 30 வருடங்கள் கழித்து தனது தந்தையின் ஊருக்கு தன் குழந்தைகளுடன் செல்லும் நாயகி அங்கு அவர் இறந்த தந்தை செய்திருக்கும் ஆராய்ச்சிகள் அவர் குழந்தைகளை எவ்வாறு ஈர்கிறது, அந்த ஊரில் மறந்திருகும் மிக பெரிய மர்மம் என்ன என்பது எல்லாம் படத்தின் கதையில் வருகிறது.

வழக்கமாக ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போல் உலகத்தை காப்பாற்ற போராடும் சிறுவர்கள் தான் கதை என்றாலும் அதை சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் ஜேசன் ரைத்மன். இவரின் தந்தை தான் முந்தைய இரண்டு பாகங்களின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் என்றாலே நாம் வியந்து பார்க்கும் விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் தான் அந்த வகையில் இந்த படத்திலும் குறை கூறமுடியாத அளவிற்கு காட்சிகள் உள்ளது. மெக்கென்ன கிரேஸ் இவர் தான் பாதி படத்தில் ஸ்கோர் செய்கிறார். மொத்தத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Related post